என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்
July 20, 2013
கனவைக் காற்றில்
கரைத்து விடாமல்
நனவாக்க நினைத்து
வல்லரசு என்ற விதையை
சிறு மனதில் விதைத்து
சிறு சோதனையில்
பெரும் சாதனை
கண்ட ஒரு தமிழன்!
காலம் போன போக்கில்
கட்டிலில் படுத்துக்கொண்டு
கனா காணாமல்
கால்வயிற்றையும் பட்டினி போட்டு
காலவரையற்ற உண்ணாவிரதம்
கண்டு, வரும் காலத்தை
வசந்தமாக்கத் துடிக்கும்
ஒரு இந்தியத் தாத்தா!
என் தேர்வு அட்டவணை
தெளிவாய்த் தெரிந்தார் போல
முந்தைய நாட்கள் எல்லாம்
சிறப்பான ஆட்டம் கண்டு
ஆடுகளத்தில் எதிரணியையும்
தேர்வு களத்தில் எங்களையும்
சிதறடிக்கும் கிரிக்கெட் கடவுள்!
‘ரோஜா’வாய் மலர்ந்து
இடைவிடா இசைமணம் கொடுத்து
ஆஸ்கார் என்ற அந்தஸ்தை
இந்திய நாட்டிற்கு அளித்த
எல்லாப் புகழும்
இவன் ஒருவனுக்கே..!!